காவிரி நீரைப் பெறுவதற்காக சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
நீண்டகாலமாகத் தொடரும் காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை நிராகரித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், காவிரி நீரில் மாநிலத்திற்குரிய பங்கைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், சட்டரீதியாக, உச்ச நீதிமன்றத்தின் மூலம் நமக்குத் தேவையான நீரைப் பெற வேண்டியுள்ளது என்று வெள்ளிக்கிழமை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை மீறி, கர்நாடகம் தொடர்ந்து நீரைத் திறந்துவிட மறுத்து வருவதாக குற்றம் சாட்டிய அமைச்சர், காவிரி நீரில் தமிழ்நாடு தனது பங்கைப் பெறுவதை தடுப்பதையே நோக்கமாகக் கொண்ட அரசியலையே கர்நாடகம் நீண்டகாலமாக செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்; மாநிலத்தின் விரிவான சட்ட உத்தி மற்றும் இறுதி முடிவுகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுதல், தீர்ப்பாயத்தை வலியுறுத்துதல், மாநிலங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துதல் அல்லது மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளை அரசு தற்போது பரிசீலித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
Summary
Law Minister CTR Nirmal Kumar asserted that the Tamil Nadu government would take all necessary legal measures to protect the interests of the state's farmers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவு!

இன்று மீண்டும் கூடுகிறது காவிரி ஆணையம்: ஒரே மாதத்தில் நடக்கும் இரண்டாவது கூட்டம்

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டபோதிலும் எங்களிடம் தண்ணீர் இல்லை: கர்நாடக அமைச்சர்

உச்ச நீதிமன்றத்தை அணுகி காவிரி நீரை பெற வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் நலன் சங்கம்
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament




