FOLLOW US

ON GOOGLE DISCOVER

நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவு!

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவு குறித்து...

News image

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவு - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 4:23 pm IST

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடகத்தில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதாகக் கூறி, தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்து விட இயலாது என கர்நாடக அரசு கூறியது.

இருப்பினும், கர்நாடக அரசின் கூற்றை ஏற்க மறுத்து, ஜூலை 29 முதல் 15 நாள்களுக்கு தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. ஆனால், காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை.

இந்த நிலையில், தமிழகம - கர்நாடகம் இடையேயான காவிரி நீர்ப் பிரச்னை குறித்து தில்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாள்களுக்கு காவிரி நீரைத் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Summary

The Cauvery Water Management Authority has ordered Karnataka to release water to Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.