லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்?

நீர்நிலை தூர்வாரும் பணிகளைத் தொடக்கி வைக்க இருசக்கர வாகனத்தை வந்தார் அமைச்சர் என். ஆனந்த்.

தவெக பொதுச் செயலா் அமைச்சர் ஆனந்த்

அமைச்சர் என். ஆனந்த்

Published On :

சென்னையில் உள்ள அடையாறு, கூவம் ஆறுகளை தூர்வாறும் பணியை அமைச்சர் என். ஆனந்த் இன்று கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணியை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் இன்று தொடக்கி வைத்தார்.

தூர்வாறும் பணியைத் தொடக்கி வைக்க அமைச்சர் வந்துகொண்டிருந்தபோது, சென்னை கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். இதனால் உரிய நேரத்துக்கு நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போகும் என்பதால், உடனடியாக அவர் இரு சக்கர வாகனம் ஒன்றை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், அதிகாரிகள் பலரும் அமைச்சர் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத வகையில், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி அமைச்சர் ஆனந்த் வந்து இறங்கினார்.

பிறகு, தூர்வாரும் இடங்களை கள ஆய்வு செய்து, பணியைத் தொடங்கி வைத்தார்.

முதலில், அவரை அங்கிருந்தவர்கள் அடையாளம் காணவில்லை. ஒரு சிலர், அவர் இரு சக்கர வாகனத்தில் வருவதை அறிந்து, பாதுகாப்புக்காக அவர் பின்னால் ஓடி வந்தனர். அதிகாரிகள் பலரும் அமைச்சர் இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குவதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக அமைச்சரே இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.