தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

பேப்பர் படித்தால்தான் நாட்டு நிலவரம் தெரியும்! முதல்வர் விஜய் - உதயநிதி வாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் விமர்சனமும் உதயநிதியின் பதிலும்...

News image

முதல்வர் விஜய் - உதயநிதி வாதம் - TN Assembly

Updated On :7 ஆகஸ்ட் 2026, 11:22 am IST

பேப்பர் படித்தால்தான் நாட்டு நிலவரம் தெரியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி முதல்வர் ஜோசப் விஜய் விமர்சனத்தை முன்வைத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் பேசுகையில், ”குறுவை சாகுபடிக்கு நிவாரணம் வழங்குவது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருந்தார். அதனை ஏற்கெனவே வழங்கிவிட்டோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், அரசியலே நாங்கதான் எனச் சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது. நாள்தோறும் பேப்பர் படித்திருந்தால் நாட்டு நிலவரம் தெரிந்திருக்கும்” என்று முதல்வர் விஜய் விமர்சனத்தை முன்வைத்தார்.

முதல்வரின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”ரூ. 134 கோடி சிறப்பு தொகுப்புதான் அரசு வழங்கியது. அது அனைத்து அரசும் வழங்குவதுதான். தற்போது விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரண நிதி. இது இரண்டுக்கும் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

நாள்தோறும் பேப்பர் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக் கட்சிகள், விவசாயிகளுடன் கலந்து பேசி அவர்களின் கருத்தை கேட்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “செப்டம்பர் இறுதி வரை பார்த்துவிட்டுதான் வறட்சி நிதி கொடுப்பது வழக்கம்” என்றார்.

Summary

Newspaper! Argument between CM Vijay and Udhayanidhi in TN Assembly!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.