பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!

தமிழக முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுகளுக்கு பெ. சண்முகம் கண்டனம்...

P. Shanmugam condemns

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கண்டனம்... - கோப்புப் படம்

Published On :

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் பேசியதற்கும், அதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பதிவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு செயலர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததைக் கேலி செய்யும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) அன்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியிருந்தார்.

மேலும், அதற்கு முதல்வர் விஜய்யின் தனி வாழ்க்கையைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, இன்று (ஜூன் 24) அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, “அப்பாவைக் காணோம்” என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது.

இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் “கணவனைத் தேடும் மனைவி” என்று பேசியதும் தவறுதான். “ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்” என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Summary

P. Shanmugam, State Secretary of the CPIM, has condemned the remarks made by CM Vijay in the Assembly and the subsequent statement issued by LOP Udhayanidhi in response.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.