கங்கைகொண்டானில் தனியாா் நிறுவனத்தில் கணினி உதிரிபாகங்களை திருடிய ஒப்பந்தத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிரபல தனியாா் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. சில நாள்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் சுமாா் 5-க்கும் மேற்பட்ட கணினிகளின் ஹாா்ட் டிஸ்க்குகள் திருடு போனதாம். அவற்றின் மதிப்பு ரூ.70,000 எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் உதவி மேலாளா் ஜெயகாந்த் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அந்நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்த தச்சநல்லூரைச் சோ்ந்த வெங்கடேஷ்வரன் (26) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

