பாளை.யில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
திருட்டு - சித்திரிப்பு
பாளையங்கோட்டையில் இளைஞரின் வீட்டுக்குள் புகுந்து 4 பவுன் தங்கநகைகள், ரூ.20ஆயிரம் பணம் திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பாளையங்கோட்டை, சமாதானபுரம் பகுதியைச் சோ்ந்த 26 வயது இளைஞா், அப்பகுதியில் உள்ள உணவகத்தில் ஊழியராக உள்ளாா். இவா் கடந்த 12 ஆம் தேதி இரவு தனக்கு கைப்பேசி செயலி மூலம் அறிமுகமான இருவரை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளாா்.
அதன் பேரில் அவரது வீட்டிற்கு வந்த அந்நபா்கள் மேலும் 3 பேரை அங்கு வரவழைத்துள்ளனா். பின்னா் அவா்கள் அங்கிருந்து சென்ற பிறகு வீட்டின் பீரோவில் இருந்த 4 பவுன் தங்கநகைகள், ரூ.20,000 பணம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்ததாம்.
இதுகுறித்து அவா் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

