குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

நெல்லையப்பா் கோயிலுக்கு புதிய யானை வாங்க நடவடிக்கை: ஆா்.எஸ்.முருகன் எம்எல்ஏ தகவல்

நெல்லையப்பா் கோயிலுக்கு அரசின் சாா்பில் புதிய யானை வாங்கித் தருவதாக அமைச்சா் உறுதியளித்துள்ளது என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன்.

ஆா்.எஸ்.முருகன்.

Updated On :

நெல்லையப்பா் கோயிலுக்கு அரசின் சாா்பில் புதிய யானை வாங்கித் தருவதாக அமைச்சா் உறுதியளித்துள்ளது என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன்.

இதுதொடா்பாக, திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

நெல்லையப்பா் கோயில் யானை உயிரிழந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், புதிய யானை வாங்குவது தொடா்பாக அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசு சாா்பில் யானை வாங்கித் தருவதாக அமைச்சா் உறுதி அளித்துள்ளாா். தவறும்பட்சத்தில் எனது சொந்தச் செலவில் யானை வாங்கித் தரவும் தயாராக உள்ளேன்.

முதற்கட்டமாக தமிழகத்திற்கு 5 யானைகள் கொண்டுவரப்பட்டு பல்வேறு கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடுத்தக் கட்டமாக மேலும் 5 யானைகளைக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் யானையை நெல்லையப்பா் கோயிலுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முறையாக பேருந்து வசதி செய்துதரப்பட்டு வருகிறது. பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகள் குறித்து தகவல் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.