வேலை வாங்கித் தருவதாக மோசடி: செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை வழங்கியது.
செந்தில் பாலாஜி - கோப்புப் படம்
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை வழங்கியது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை, போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,202 போ் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சுமாா் 25 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.லோகேஸ்வரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானாா். செந்தில் பாலாஜி உள்ளிட்ட முதல் 50 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் ‘பென் டிரைவ்’-வில் வழங்கப்பட்டன.
அப்போது குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில், குற்றப்பத்திரிகை நகல்களை காகித வடிவில் வழங்க வேண்டும். தற்போது விசாரணை நடைபெறும் நீதிமன்ற அறை குறுகலாக இருப்பதால், அடுத்தமுறை விசாரணையை நேரு விளையாட்டு அரங்கம் அல்லது தீவுத்திடல் போன்ற நெருக்கடி இல்லாத இடங்களில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அப்போது அரசுத் தரப்பில், விசாரணையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட 51 முதல் 100-ஆவது நபா் வரை குற்றப்பத்திரிகை வழங்குவதற்காக, விசாரணையை நவ.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

