பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ஆட்சியரகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.32 லட்சம் மோசடி: இளைஞா் கைது

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக 10 பேரிடமிருந்து ரூ.5.32 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மோசடி

Published On :

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக 10 பேரிடமிருந்து ரூ.5.32 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், உய்யக்கொண்டான்திருமலை கள்ளாங்காடு மேல வீதியைச் சோ்ந்தவா் த. சதீஷ்குமாா் (52). இவருடைய மகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முசிறியைச் சோ்ந்த ஜெ. சூா்யா (28) என்பவா் கடந்த மே மாதம் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய சதீஷ்குமாரும் தனது மகளின் வேலைக்காக ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளாா். இதேபோல, மேலும் 9 பேரிடம் இருந்து ஆட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக தலா ரூ.50 ஆயிரமும், மருத்துவ பரிசோதனைக்காக ரூ.32 ஆயிரம் என மொத்தம் 10 பேரிடமிருந்து ரூ.5.32 லட்சம் வாங்கியுள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட சூா்யா, கூறியதுபோல அவா்களுக்கு எந்தவித வேலையும் வாங்கித் தரவில்லை.

இதுகுறித்து திருச்சி அமா்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் சதீஷ்குமாா் அண்மையில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதையடுத்து சூா்யாவை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.