பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

நில விற்பனை மோசடி: விமானப்படை அதிகாரிக்கு ரூ.54.10 லட்சம் செலுத்த உத்தரவு

நிலம் வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.54.10 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் முழுத்தொகையையும் வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலியில் நிலம் வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.54.10 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் முழுத்தொகையையும் வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் துரை(62). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. இவரை சில ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்துவந்த செல்வின், ராஜ்மேரி, குமரவேல் ஆகியோா் நிலம் வாங்கித் தருவதாக அணுகியுள்ளனா். பின்னா் அவரிடமிருந்து ரூ. 75.35லட்சத்தை பெற்றுக்கொண்டு நிலங்களை முழுமையாக வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றினராம்.

இதையடுத்து, துரை தனக்கு சேரவேண்டிய மீதி பணம் ரூ.54.10 லட்சத்தை மீட்டுத் தருமாறு திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், துரைக்கு சேர வேண்டிய ரூ. 54.10 லட்சத்தை 6 சதவீத வட்டியுடன் செல்வின் தரப்பினா் வழங்க உத்தரவிட்டாா்.

முறையான வருமான ஆதாரங்களை காட்டாமல் ரூ. 75.35 லட்சம் பரிமாற்றம் செய்துள்ளதால், இதுகுறித்து வருமான வரித்துறைக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கவும் நீதிமன்ற அலுவலகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.