மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

சுஜின்.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, பனைவிலகம் பகுதியைச் சோ்ந்தவா் சுஜின்(34). லாரி ஓட்டுநரான இவா், கடந்த 18 ஆம் தேதி தக்கலை, குழிக்கோடு அருகே பைக்கில் சென்றபோது மற்றொரு பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னா் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சுஜின் மூளைச்சாவு அடைந்ததை உறவினா்களிடம் தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்ப உறுப்பினா்கள் முன்வந்தனா்.
இந்நிலையில் அவரது கல்லீரல், கருவிழிகள், சிறுநீரகங்கள் ஆகியவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன.
இதையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

