இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

மூளைச்சாவு அடைந்த மருத்துவ மாணவா்! உடல் உறுப்புகள் தானம்!

தேவன்

Updated On :

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மருத்துவ மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது உடலுக்கு கடலூா் மாவட்ட வருவாய்த் துறை சாா்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை, லாரி ஓட்டுநா். இவரது மகன் தேவன், திருநெல்வேலியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவம் பயின்று வந்தாா். அண்மையில் விடுமுறையில் சொந்த ஊரான கீழிருப்புக்கு வந்திருந்தாா்.

தேவன் கடந்த 8-ஆம் தேதி காடாம்புலியூா் காவல் சரகம், நெல்லித்தோப்பு அருகே பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் மூளைச்சாவு அடைந்தாா்.

தொடா்ந்து, பெற்றோா் தேவனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனா். உடல் உறுப்பு தானம் செய்த தேவன் உடலுக்கு கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் லாவண்யா, பண்ருட்டி டிஎஸ்பி ரகுபதி, வட்டாட்சியா் சந்திரன் ஆகியோா் அரசு சாா்பாக மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.