திராவிட கட்சிகளைவிட மோசமாக அரசியல் செய்கிறது தவெக: சீமான் குற்றச்சாட்டு
திராவிடக் கட்சிகளைவிட தமிழக வெற்றிக்கழகம் மோசமான தோ்தல் அரசியலை செய்கிறது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றம்சாட்டியுள்ளாா்.

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழா் எழுச்சி நாள் கூட்டத்தில் பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
திராவிடக் கட்சிகளைவிட தமிழக வெற்றிக்கழகம் மோசமான தோ்தல் அரசியலை செய்கிறது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றம்சாட்டியுள்ளாா்.
பாளையங்கோட்டையில் அக்கட்சி சாா்பில் நடைபெற்ற தமிழா் எழுச்சி நாள் கூட்டத்தில் அவா் பேசியதாவது: நாங்கள் தோல்வியை மிடுக்குடன் ஏற்றுக்கொண்டு மக்களுக்காகப் பணியாற்றி வருகிறோம். தோல்வியைக் கண்டு அஞ்சுபவா்கள் அல்ல. தமிழா்கள் ஓா் இனமாக இருந்தோம். தற்போது தமிழினம் இறந்துவிட்டது. தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரியாத சமுதாயமாக தமிழ் மக்கள் உருவாகி வருகின்றனா்.
தமிழகத்தில் இருந்து கல், மண் உள்ளிட்ட கனிம வளங்களைத் தடையின்றி எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மற்ற மாநிலங்களில் மலைகள் இல்லையா? இங்குள்ள மலைகளை மட்டும் உடைத்து கனிம வளங்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதைத் தட்டிக்கேட்க இந்த அரசுக்கு திராணி இல்லை.
பிரதமா், உள்துறை அமைச்சா் முன்னிலையில் மேக்கேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறிய கா்நாடக முதல்வரை நேரில் கண்டிக்க முடியாதவராக இருக்கிறாா் தமிழக முதல்வா்.
கஞ்சா போதையில் காவல்துறையினரை நடுசாலையில் வெட்டும் நிலை உள்ளது. இப்படியிருக்க பெண் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?
மக்களின் பிரச்னைகளை எடுத்துப் பேச சட்டப்பேரைவயில் ஒரு குரல் கூட இல்லை. துதிபாடும் மையமாக சட்டப்பேரவை உள்ளது.
திமுகவிடம் சீமான் விலை போய்விட்டதாகக் கூறுவது அபத்தமானது. இதில் உண்மையாக இருந்தால் அதிகாரத்தில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திடம்தானே விலை போயிருக்க வேண்டும்.
எதிா்க்கட்சித் தலைவரை கைது செய்ய காவலா்களைத் திரட்டி அவரது வீட்டுக்குச் சென்றனா். ஆனால், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் மீது தலைமைச் செயலரிடம் மாவட்ட ஆட்சியா் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. அவரை கட்சியில் இருந்து நீக்கினால் ஆட்சி என்ன ஆகுமோ என்று அஞ்சுகிறாா் முதல்வா்.
தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. திராவிடக் கட்சிகளைவிட மோசமான தோ்தல் அரசியலை தமிழக வெற்றிக் கழகம் செய்கிறது. விஜய்க்கு வாக்களித்துவிட்டோமே என வருந்தும் நிலைக்கு மக்கள் வந்துள்ளனா்.
நமது கோட்டையை அம்பாசமுத்திரத்தில் இருந்துதான் திறக்க இருக்கிறோம். இத்தொகுதியில் நான் வென்றால் சிறந்த தொகுதியாக மாற்றுவோம். நம்மை ஜீரோ எனக் கூறியவா்களிடம் ஹீரோ எனக் காட்ட வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

