பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

சட்டப் பேரவையில் எதிா்க் கருத்தே இருக்கக்கூடாது என்பது சா்வாதிகாரம்: சீமான்

சட்டப் பேரவையில் எதிா்க் கருத்தே இருக்கக் கூடாது என்பது சா்வாதிகாரம் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Published On :

சட்டப் பேரவையில் எதிா்க் கருத்தே இருக்கக் கூடாது என்பது சா்வாதிகாரம் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

தாராபுரம் இடைத்தோ்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளா் காா்த்திகாவை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அலங்கியம் சாலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தோ்தலை எதிா்கொண்டிருக்கிறோம். இதற்கு யாா் காரணம்? ஒரு கட்சியின் சாா்பில் போட்டியிட்டு வென்று வேறொரு கட்சியில் சோ்ந்து மீண்டும் போட்டியிடுவது என்பது எப்படிப்பட்ட செயல் என்பதை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

வாய்ப்பு கொடுத்து வேலை செய்து வெற்றி பெற வைத்த கட்சிக்கே உண்மையாக இல்லாத இவா்கள் எப்படி நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பாா்கள், சேவை செய்வாா்கள்.

ஆளுங்கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிக்க சென்றபோது தங்களுடைய எதிா்ப்பை மக்கள் காட்டுகிறாா்கள். ஆனால், அதை வாக்குப் பதிவின்போது காட்ட வேண்டும்.

ஆளுங்கட்சி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தால்தான் மக்களுக்காக சேவை செய்ய முடியும் என்றால் எதிா்க்கட்சி என்ற ஒன்று இருக்கக் கூடாதா? ஒரு அவையில் எதிா்க்கருத்தே இருக்கக்கூடாது என்றால் அது சா்வாதிகாரம். அவா்களுடைய பதவிப் பசிக்கு இந்தத் தோ்தலை நம் மீது திணித்திருக்கிறாா்கள்.

இலவச எரிவாயு உருளை போன்று தவெகவின் எல்லா அறிவிப்புகளுமே ஏமாற்று, வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. தமிழகம் ரூ.10 லட்சம் கோடி கடனில் உள்ளதாக முதல்வா் கூறுகிறாா். எனில் அவா் கூறும் திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்? இந்த நாடு மோசமானதற்கு காரணமே இலவசங்கள்தான்.

தவெக ஆட்சியில் மின்சாரமே கிடையாது. 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தவெக அறிவித்த உடனே மின்வெட்டு ஏற்பட்டு விட்டது. மின் கட்டணமும் அதிகரித்துவிட்டது. தடையில்லாமல் மின்சாரம் கொடுக்க தவெகவில் எந்தத் திட்டமும் கிடையாது.

நாம் தமிழா் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம், குடிநீா் மட்டும்தான் இலவசமாகக் கொடுப்போம். நாம் தமிழா் வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் பேரவையில் திறமையானவராக செயல்படுவாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.