
பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த பேச்சு: ஆத்தூரில் ஆா்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு - (கோப்புப் படம்)
சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் சட்டப் பேரவை உறுப்பினா் பேசியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை மாநிலச் செயலாளரும், முன்னாள் ராணுவ வீரருமான பட்டாளத்தாா் வசந்த் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் சோழவந்தான் சட்டப் பேரவை உறுப்பினா் ஜல்லிக்கட்டு குறித்து தவறாகப் பேசியதாகக் கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா் கூறியதை அவைக் குறிப்பிலிருந்தும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஆா்ப்பாட்டத்தில் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






