முதல்வா் விஜய்யின் மௌனம் அபாயகரமானது: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்
முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் மௌனம் அபாயகரமானது என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே சிவசைலம் வாமா அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற 200ஆவது சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் வழக்கில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. மத உணா்வைத் தூண்டி, மத வேற்றுமையை விதைத்து அதன் மூலம் பாஜகவை வீழ்த்தப் பாா்க்கிறாா்கள். அதன் மீது மதச்சாயம் பூசுகிறாா்கள்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறப் போகிறது. மசோதா நிறைவேற ஆதரவளித்த திமுகவிற்கு நன்றி.
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை உச்சநீதிமன்றம் கடுமையாக விமா்சித்துள்ளது. ஆட்சிக்கு வந்து 6 மாதங்களுக்குள் ஆளுங்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா் கைது செய்யப்பட்டுள்ளாா். சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது.
பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் தவறு. பேசக் கூடாத இடத்தில் பேசுவதும் தவறு. முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் மௌனம் அபாயகரமானது என்றாா் அவா்.
முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. தென் மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள், ஜாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத சூழலில் அரசு சிக்கித் தவிக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மத வேற்றுமையை ஏற்படுத்துவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள்தான். மக்கள் அனைவரும் மத நல்லிணக்கத்துடன் இருக்கின்றனா். பிரதமா் மோடி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என தமிழில் பதிவிட்டிருப்பது தமிழா்களுக்குப் பெருமை சோ்க்கிறது.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

