மோசமாகச் செயல்படும் தவெக அரசின் 3 முன்னுதாரணங்கள்: பாஜகவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
மாநிலத்தில் தவெக அரசு மோசமாகச் செயல்படுவதாக பாஜக குற்றம் சாட்டியது குறித்து...
செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் - DNS
திருப்பரங்குன்றம் தீப விவகாரம், கள்ளக்குறிச்சி எம்எல்ஏவான சி.அருள் விக்னேஷ் கைது, செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு, மாநில அரசு மோசமாகச் செயல்படுவதாக தவெக மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை (நவ. 28) செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்சியமைத்த 6 மாதங்களில் ஒரு எம்எல்ஏ கைது, உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனம், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத சூழ்நிலை முதலானவற்றில் தவெக அரசு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் தவெக பிரபலமாகி விட்டது. நீங்கள் (தவெக) தடுக்க நினைத்த தீபம், இன்று உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்த விவகாரத்தில் சிறுபான்மையினரின் ஆதரவும் இருக்கிறது. அங்கே தர்கா இருப்பதால்தான், தீபமேற்ற முயற்சிகள் நடப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், அப்படியொன்றும் கிடையாது.
தர்காவையும் முருகனையும் எல்லோரும் ஒன்றாகக் கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, தவெகவினர்-தான் மத வேற்றுமையை ஏற்படுத்துகின்றனர்.
திருச்செந்தூர் முருகனுக்கு வேல் எடுத்து, 'தான் அனைத்து மதங்களுக்கும் சமமானவன்' என்று ஒரு பிம்பத்தை விஜய் உருவாக்கியிருந்தார். ஆனால், அந்தப் பிம்பம் தவிடுபொடியாக்கப்பட்டது.
இதேபோல், ஜெம் வீரமணியை கைது செய்து, 'பாலியல் குற்றங்களை ஒப்புக்கொள்ளாதவன்' என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தார். ஆனால், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்யாததன் மூலம் அந்தப் பிம்பமும் தவிடுபொடியானது.
எம்எல்ஏவை கண்டுபிடிக்கவே இவ்வளவு நாளாகியுள்ளது. பின்னர் எப்படி செஞ்சி சிறுமியைக் கண்டுபிடிப்பர்? செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் - இந்த தவெக அரசு எவ்வளவு மோசமாகச் செயல்படுகிறது என்பதற்கு ஒரு முன்னுதாரணம்" என்று தெரிவித்தார்.
Summary
TVK Vijay's government performing poorly in the state, says BJP Leader Tamilisai Soundararajan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

