பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி
பெரியார் அறிவுலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியிருப்பது பற்றி....

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்
பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா..? என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுசென்ற திமுக அரசு... கோவை பெரியார் அறிவுலகம் எழுப்பியதற்கு முழு சொந்தம் கொண்டாடினார்கள்... ஒரு ஆட்சி மாறி அடுத்த ஆட்சியில் திட்டங்களை அடுத்து ஆட்சி திறந்து வைப்பது இயற்கைதான்... ஆனால் அதைசற்றும் பொறுத்துக் கொள்ளாமல் முழு உரிமையும் தங்களுக்குத்தான் என்றும்.. அந்த நூலகத்தில் ஒவ்வொரு நகர்வையும் தனிப்பட்ட முறையில் நான் சரி பார்த்தேன் என்று சொன்ன முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேட்டி கொடுத்து கொண்டு இருக்கும்போதே பின்னால் கொள்ளையடிப்பது கொள்கை என்று குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி, நேரு, ஏவா வேலு..
போன்றவர்கள் நின்று கொண்டு இருந்ததை பார்த்தால்.. எதை எண்ணினார்கள் எதை சரி பார்த்தார்கள். என்றேகேள்வி கேட்க தோன்றுகிறது .. குடிப்பதை ஊக்குவித்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று ஊழல் செய்தவர்கள் இன்று படிப்பதிலும் புத்தகம் வாங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது மன்னிக்க முடியாத குற்றம்... இது ஒரு அறிவு திருட்டு என்பது மட்டுமல்ல இந்த தவறான போலி AI நூல்களை வருங்கால சந்ததியினர் படித்திருந்தார்கள் என்றால்.. பெரியார் அறிவு நூலகம் என்று இவர்கள் பெயர் வைத்தது பெரியார் அறம் இல்லாத நூலகமாக மாறிக்கொண்டிருந்திருக்கிறது...
இதற்கு முன்னால் ஊழலில் மக்களின் அடிமடியில் தான் கை வைத்துக் கொண்டு இருந்தார்கள் இன்று குழந்தைகளின் அறிவிலேயே கையை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.. என்ன கொடுமை இது? எந்த உலகத்திலும் நடக்காத ஒன்று.. பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக இந்த ஊழலுக்கும் உரிமை கொண்டாடுவார்களா ?பொறுப்பேற்பார்களா..? அதே நேரத்தில் இந்த அரசு பாராபட்சம் பார்க்காமல் இந்த அறிவுத்திருட்டை உடனே கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அத்தனை நூல்களும் எழுத்தாளர்கள் குழு கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்... ஆக ஊருக்கு ஒரு நூலகம் ஊழலுக்காக தானா? என் தெரிவித்துள்ளார்.
கோவையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, கடந்த மாதம் முதல்வர் ச. ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Summary
Former BJP State President Tamilisai Soundararajan questioned whether the DMK, which claimed ownership of the Periyar Knowledge Library, would also take responsibility for the corruption.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


