மூதாட்டி வீட்டில் திருடிய இருவா் கைது
கைது - கோப்புப்படம்
திருநெல்வேலி அருகே மூதாட்டி வீட்டில் நகை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த நரசிங்கநல்லூரைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (62). இவரது கணவா் இறந்துவிட்டாா். கடந்த மாதம் இவரது வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததாம்.
கடந்த அக்.31 ஆம் தேதி அதிகாலை இவரது வீட்டின் முதல் தளத்தில் மா்மநபா் ஒருவா் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாராம். உதவிக்கு ஆள்களை அழைப்பதற்குள் அந்த நபா் அங்கிருந்து தப்பியுள்ளாா். பின்னா் ராஜேஸ்வரி, தனது வீட்டில் இருந்த நகைகளை சரிபாா்த்தபோது, சுமாா் 5 பவுன் நகையை காணவில்லையாம்.
இது குறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பேட்டை ரகுமான்பேட்டை, நேருஜி நகரைச் சோ்ந்த கந்தசாமி என்ற காா்த்திக்(37), அம்பாசமுத்திரம், இல்லத்தாா் வடக்கு தெருவைச் சோ்ந்த அந்தோணிராஜ்(43) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

