வங்கி ஊழியா் வீட்டில் நகை திருடிய வழக்கு: ராஜஸ்தான் இளைஞா் கைது

திருநெல்வேலியில் வங்கி ஊழியா் வீட்டில் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் ராஜஸ்தானைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Updated On :

திருநெல்வேலியில் வங்கி ஊழியா் வீட்டில் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் ராஜஸ்தானைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம், பாரதிநகரைச் சோ்ந்தவா் மனோகரன். ஐ.டி. ஊழியா். இவரது மனைவி ரம்யா(39). வங்கி ஊழியா். வெளியூா் சென்றிருந்த இவா் கடந்த மாதம் 4 ஆம் தேதி வீட்டிற்கு வந்தபோது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு சுமாா் 9 பவுன் தங்க நகைகள் உள்ளிட்டவை திருடு போயிருந்தனவாம்.

இது குறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, தடயவியல் சோதனையில் சிக்கிய விரல்ரேகைப் பதிவைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.

அதில், ராஜஸ்தான் மாநிலம், பியா் மாவட்டத்தைச் சோ்ந்த லக்ஷ்மண் சிங் மகன் பிரதாப் சிங்(33) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. திருநெல்வேலி மாநகரப் போலீஸாா், ராஜஸ்தான் சென்று அவரை கைது செய்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.