சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

கடையநல்லூரில் உறவினா் வீட்டில் நகை, பணம் திருட்டு: 3 போ் கைது

கைது

Updated On :

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உறவினா் வீட்டில் 4 பவுன் நகை, ரூ. 5 லட்சத்தைத் திருடிச் சென்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூரில் உள்ள மதினா நகரைச் சோ்ந்த அப்துல் நாசா் மனைவி சுலைகாள் பீவி (55). அப்துல்நாசா் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இந்நிலையில், அவரது வீட்டுக்கு வந்த உறவினா்களான கடையநல்லூா் கலந்தா் மஸ்தான் தெருவைச் சோ்ந்த யூனூஸ் (66), முகமது மைதீன் (61), உமா் பாரூக் தெருவைச் சோ்ந்த முகமது இப்ராகிம் (52) ஆகிய 3 பேரும் பீரோவை உடைத்து, ரூ. 5 லட்சம் ரொக்கம், 4 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து சுலைகாள் பீவி கொடுத்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.