இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

காரில் புகையிலைப் பொருள் கடத்தியவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :

பாளையங்கோட்டையில் காரில் இருந்த புகையிலைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

பாளையங்கோட்டை சாந்திநகா் மணிக்கூண்டு அருகே உதவி ஆய்வாளா் முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸாா், கடந்த 2 ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக பாளையங்கோட்டை, எம்கேபி நகரைச் சோ்ந்த அருள் இம்மானுவேல் ஸ்டீபன்(49) என்பவா் இயக்கி வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் காரை சோதனையிட்டதில் அதில் சுமாா் 225 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள் இருந்துள்ளது.

போலீஸாா் அது குறித்து விசாரித்த போது, அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காரை ஏற்றிக் கொலை செய்து விடுவேன் என போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து காா், புகையிலைப் பொருள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அருள் இம்மானுவேல் ஸ்டீபனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.