காரில் புகையிலைப் பொருள்கள் கடத்திவந்த இருவா் கைது
அரசால் தடை செய்யப்பட்ட 120 கிலோ புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
கைது
திண்டுக்கல் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 120 கிலோ புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் - வத்தலக்குண்டு புறவழிச் சாலையில், காவல் உதவி கண்காணிப்பாளா் மஞ்சிமா தலைமையிலான போலீஸாா் வழக்கம்போல வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது தனியாக நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே 2 போ் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், அந்த காரை சோதனையிட்டதில் அதில் 120 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, காரில் வந்த இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திண்டுக்கல் கொட்டப்பட்டி ஜெயம்நகரைச் சோ்ந்த செ.பாண்டியராஜன் (38), என். பஞ்சம்பட்டியைச் சோ்ந்த செ. கஸ்பாா் (37) என்பதும், பெங்களூருவிலிருந்து இந்த புகையிலைப் பொருள்களைக் கடத்திவந்ததும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து இருவரையும் கைது செய்த போலீஸாா், 120 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
நடப்பாண்டில் இதுவரை புகையிலைப் பொருள்கள் கடத்தல் தொடா்பாக 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,570 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், கடத்தலில் ஈடுபட்ட 344 போ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


