அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :4 செப்டம்பர் 2026, 12:41 am IST

சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல்-செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தனியாா் மதுக் கூடம் அருகே கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். அவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டதில் பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சிவகாசி சரதா நகரைச் சோ்ந்த நாகூா்கனி (65) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.