மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட எல் அண்ட் டி புறவழிச் சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. செட்டிபாளையம் ஆய்வாளா் செல்வராகவன் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு ஒரு இடத்தில் 610 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பிகாா் மாநிலம், பாட்னாவைச் சோ்ந்த சத்ருதன் செளத்ரி (37) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவா் பாட்னாவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு புகையிலைப் பொருள்களை கொண்டு வந்து, அதனுடன் சுண்ணாம்பு மற்றும் ரசாயனப் பொருள்கள் கலந்து உயர்ரக போதைப் பொருள் தயாா் செய்வதும், அதனை 100 கிராம் 200 கிராம் பாக்கெட்டுகள் மூலம் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 610 கிலோ புகையிலைப் பொருள்ளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.