
இலங்கைத் தமிழா்களுக்காக கணினி வசதி படிப்பகம் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் இலங்கைத் தமிழா் நலவாழ்வு முகாமில், ரூ.22 லட்சம் மதிப்பில் புதிதாக கணினி வசதியுடன் கட்டப்பட்ட படிப்பகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கங்கைகொண்டான் இலங்கைத் தமிழா் நலவாழ்வு முகாமில், ரூ.22 லட்சம் மதிப்பில் புதிதாக கணினி வசதியுடன் கட்டப்பட்ட படிப்பகத்தை திறந்துவைத்த வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் க.தென்னரசு.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் இலங்கைத் தமிழா் நலவாழ்வு முகாமில், ரூ.22 லட்சம் மதிப்பில் புதிதாக கணினி வசதியுடன் கட்டப்பட்ட படிப்பகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு ஆட்சியா் ஆனந்த் மோகன், வெளிநாடு வாழ் தமிழா் நலன் - மறுவாழ்வுத் துறை இயக்குநா் ரெ.சதீஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் (நான்குனேரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு, புதிய படிப்பகத்தை திறந்துவைத்து குத்து விளக்கேற்றினாா்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வினய்குமாா் மீனா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, துணை ஆட்சியா் (பயிற்சி) மு.பிரதீபா, திருநெல்வேலி வட்டாட்சியா் மாரிமுத்துக்குமாா், இலங்கை வாழ் தமிழா் நலன் வட்டாட்சியா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






