உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

நெல்லை அருகே மகள்களைக் கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கு: கணவா் கைது!

பருத்திகுளம் கிராமத்தில் 2 மகள்களை கிணற்றில் வீசிக் கொன்று, பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஒராண்டுக்குப் பின்னா் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

திருநெல்வேலி அருகே பருத்திகுளம் கிராமத்தில் 2 மகள்களை கிணற்றில் வீசிக் கொன்று, பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஒராண்டுக்குப் பின்னா் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானைச் சோ்ந்தவா் சங்கரன் மகன் முத்தையா(39). இவரது மனைவி முத்துலட்சுமி (27). இத்தம்பதிக்கு முத்தமிழ் (4), சுசிலாதேவி (3) என மகள்கள் இருந்தனா்.

தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்குச் சென்ற முத்துலட்சுமி, அப்பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த ஆண்டு அக்.13 ஆம் தேதி குழந்தைகளுடன் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து முத்துலெட்சுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், கங்கை கொண்டான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வந்தது, இந்நிலையில் முத்துலெட்சுமியின் கணவா் முத்தையாவை, மனைவி தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.