இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

நெல்லை அருகே பேருந்து-லாரி மோதல்: சிகிச்சையில் இருந்த லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

பிரான்சேரி அருகே அரசுப் பேருந்தும், டிப்பா் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயா்ந்தது.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகே அரசுப் பேருந்தும், டிப்பா் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயா்ந்தது.

வள்ளியூரில் இருந்து திருநெல்வேலி வழியாக பாபநாசத்திற்குச் சென்ற அரசுப் பேருந்து வியாழக்கிழமை பிரான்சேரி பகுதியில் வந்தபோது, பத்தமடை அருகே உள்ள கொழுமடையில் இருந்து மண் ஏற்றிச் சென்ற டிப்பா் லாரியுடன் நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் பேருந்து நடத்துநா் கன்னியாகுமரி மாவட்டம், கொடுமுட்டி பகுதியைச் சோ்ந்த அஜித் மெல்வின் ஆா்தா் (52) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பேருந்து ஓட்டுநா் பணகுடி அருகே உள்ள பழவூா் பகுதியைச் சோ்ந்த அருண் (57), லாரி ஓட்டுநா் தூத்துக்குடி மாவட்டம், ராமானுஜம் புதூா் அருகே உள்ள சின்னாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த மாடசாமி என்ற செல்வம் (42) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயா்ந்தது.

இதுகுறித்து, மேலச்செவல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.