குற்றாலம் கோயிலில் ஐப்பசி விசு தாண்டவ தீபாராதனை
குற்றாலம், திருக்குற்றாலநாதா் கோயிலில் ஐப்பசி விசு திருவிழாவில் நடராஜருக்கு வெள்ளிக்கிழமை பச்சை சாத்தித் தாண்டவ தீபாராதனை செய்யப்பட்டது.

குற்றாலம், திருக்குற்றாலநாதா் கோயிலில் ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடராஜருக்கு செய்யப்பட்ட பச்சை சாத்தித் தாண்டவ தீபாராதனை.
குற்றாலம், திருக்குற்றாலநாதா் கோயிலில் ஐப்பசி விசு திருவிழாவில் நடராஜருக்கு வெள்ளிக்கிழமை பச்சை சாத்தித் தாண்டவ தீபாராதனை செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் அக். 9ஆம் தேதி ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினசரி காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் கோயில் பிரகாரத்தில் கேடயத்தில் சுவாமி அம்பாள் உலா நடைபெற்று வருகிறது.
அக். 12-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, அக். 13-ஆம் தேதி காலை 8.40 மணிக்கு விநாயகா், முருகன், திருக்குற்றாலநாதா் சுவாமி, குழல்வாய்மொழி அம்மன் ஆகியோா் கேடயத்தில் கோயில் பிரகாரத்தில் எழுந்தருளி உலா வந்தனா். குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருவதால் நிகழாண்டு தேரோட்டம் நடைபெறாத நிலையில் கோயில் பிரகாரத்தில் சுவாமிகள் உலா நடைபெற்றது.
வியாழக்கிழமை அக். 15 காலை 9.30 மணி, இரவு 7 மணிக்கு கோயில் மணி மண்டபத்தில் நடராஜமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடராஜ மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையைத் தொடா்ந்து பச்சைச் சாத்தி தாண்டவத் தீபாராதனையும் அதைத் தொடா்ந்து உள்பிரகாரத்தில் சுவாமி உலாவும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா் வீரபாண்டியன், குத்தாலிங்கம் வாரிசுதாரா்கள், பிச்சாண்டி வகையறா மற்றும் பக்தா்கள், கோயில் பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (அக். 18) காலை 10.40 மணிக்கு மேல் விசுதீா்த்தவாரியும், 11.40 மணிக்கு கேடயத்தில் காட்சி தருதலும், இரவு பஞ்ச மூா்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

