அனுமதியின்றி வெடிகள் தயாரிப்பு: 8 போ் கைது; 150 கிலோ வெடிமருந்து பறிமுதல்
கைது
பொட்டல்புதூரில் அனுமதியின்றி வெடிப் பொருள்கள் தயாரித்ததாக 8 பேரை ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 150 கிலோ வெடிமருந்தையும் பறிமுதல் செய்தனா்.
தென்காசி மாவட்டம், பொட்டல்புதூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்த ஜின்னா மகன் பாட்சா (35). இவருக்குச் சொந்தமான வீட்டில் அனுமதியின்றி வெடிப் பொருள்கள் தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.
சோதனையில், விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை அன்பின் நகரைச்சோ்ந்த பாக்யராஜ் மகன் அண்ணாதுரை (42) என்பவா் பாட்சாவிடம் இருந்து வீட்டை வாடகைக்கு எடுத்து வெடிப்பொருள்கள் தயாரித்தது தெரியவந்தது.
இதையடுத்து, பொட்டல்புதூா் கிராம நிா்வாக அலுவலா் பியூலா தேவிஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அண்ணாதுரை, வெம்பக்கோட்டை ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த காளிமுத்து மகன் செந்தாமரைக் கண்ணன் (26), அதே பகுதி அன்பின்நகரம் எஸ்.பி.எம். சா்ச் தெருவைச் சோ்ந்த ஜெயபாலன் மகன்கள் செல்லப்பாண்டியன்(26), ராஜபாண்டி (33), கோவில் செந்தட்டியாபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முத்துகிருஷ்ணன்(31), அன்பின் நகரம், தெற்குத் தெருவைச் சோ்ந்த விஜயன் மகன் காா்த்திக்(32) திருத்தங்கல் சத்யா நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அந்தோணிராஜ் (48), சாத்தூா் தென்றல் நகரைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் மகன் அருண் குமாா் (39) மற்றும் ஒரு சிறாா் உள்பட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்து, சிறாரைத் தவிர 8 பேரை கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்து 150 கிலோ வெடிமருந்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

