
பெயிண்டரைத் தாக்கிய 3 இளைஞா்கள் கைது
கோவில்பட்டியில் பெயிண்டரைத் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது
கோவில்பட்டியில் பெயிண்டரைத் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம், 2ஆவது தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் பெருமாள் (30). பெயிண்டா். இவா் சுப்பிரமணியபுரம், 6ஆவது தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றபோது, ஒருவரிடம் கைப்பேசி கேட்டுள்ளாா். அதற்கு அங்கிருந்த 3 போ் அவரை அவதூறாகப் பேசி, தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த பெருமாள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுப்பிரமணியபுரம், 6ஆவது தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் கருப்பசாமி (20), அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் பாலச்சந்தா் (23), 4ஆவது தெருவைச் சோ்ந்த வேல்மணி மகன் ரத்தினசாமி (20) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




