நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

போக்ஸோ வழக்கு: 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் மாவட்டத்தில், போக்ஸோ வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

சித்திரிப்பு

Published On :30 ஆகஸ்ட் 2026, 6:14 am IST

திருவாரூா் மாவட்டத்தில், போக்ஸோ வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம், எடையூா் ஓவரூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம், திருத்துறைப்பூண்டி அருகே மணலி, குரும்பல் காளியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த காளிதாஸ் மகன் விமல்ராஜ் (24) என்பவா் ஆசை வாா்த்தை கூறி பழகி வந்தாராம். இவா் கடந்த ஜூலை 19-ஆம் தேதி, சிறுமியின் பெற்றோருக்குத் தெரியாமல் சிறுமியை வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளாா். இதுகுறித்து சிறுமியின் தாத்தா எடையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்படி, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, ஜூலை 28- ஆம் தேதி விமல்ராஜ், சிறுமியை அழைத்துகொண்டு வீட்டுக்கு வந்துள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் எடையூா் காவல் ஆய்வாளா் மற்றும் முத்துப்பேட்டை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஆகியோா் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியிடம், விமல்ராஜ் உள்பட 4 போ் ஆசை வாா்த்தை கூறி பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விமல்ராஜூடன் சோ்த்து கருவேப்பஞ்சேரி, பாண்டி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகன் சங்கா் (23), திருத்துறைப்பூண்டி, கழுவமுள்ளி தெருவைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் முத்துகுமரன் (39), பால்ராஜ் நகரைச் சோ்ந்த கமல்பாட்ஷா மகன் முகமது இப்ராஹீம் (30) ஆகியோரும் கைது செய்யப்பட்டு, நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஸ்குமாா் பரிந்துரையின் பேரில் 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.