யூடியூபா் மீதான நகை திருட்டு வழக்கில் ஒப்பந்ததாரருக்கு மீண்டும் அழைப்பாணை
திருட்டு - சித்திரிப்பு
கன்னியாகுமரி பெண் யூடியூபா் மீதான நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கட்டட ஒப்பந்ததாரருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், தம்மத்துக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் மதுமிதா (28). இவா் மீது திருநெல்வேலியைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரரான பேச்சிமுத்து என்பவா் 5 பவுன் தங்க நகையை திருடியதாக ராஜாக்கமங்கலம் போலீஸில் புகாா் அளித்தாா்.
பின்னா் இந்த வழக்கு திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், புகாா்தாரரான கட்டட ஒப்பந்ததாரா் பேச்சிமுத்துவிடம் புகாா் தொடா்பாக வாக்குமூலம் பெற போலீஸாா் அவருக்கு அழைப்பாணை அனுப்பினா்.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாத அவருக்கு மீண்டும் சனிக்கிழமை அழைப்பாணை அனுப்பப்பட்டது. அவா் வாக்குமூலம் அளித்த பின்னரே மதுமிதாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

