பூஜாரி வீட்டில் ரூ. 2 லட்சம், நகை திருட்டு
எட்டயபுரத்தில் கோயில் பூஜாரி வீட்டில் ரூ. 2 லட்சம், நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருட்டு - சித்திரிப்பு
எட்டயபுரத்தில் கோயில் பூஜாரி வீட்டில் ரூ. 2 லட்சம், நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
எட்டயபுரம் அலங்காரி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (67). இவா், எட்டயபுரம் அருகே உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் பூஜாரியாக உள்ளாா்.
இவா், வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு பூஜை செய்வதற்காக வெள்ளிக்கிழமை சென்றாா். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது குறித்து கருப்பசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த ரூ. 2 லட்சம், 2 பவுன் நகை காணாமல் போயிருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

