சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ரயில்வே சுரங்கப் பாதைப் பணியை விரைந்து முடிக்க எம்.பி. வலியுறுத்தல்

ராபா்ட் புரூஸ் எம்.பி.

Updated On :

நான்குனேரி அருகே வாகைகுளம் ரயில்வே சுரங்கப் பாதைப் பணிகளை விரைந்து முடிக்குமாறு திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

2025ஆம் ஆண்டு முற்பகுதியில் தொடங்கிய இப்பணிகள் 6 மாதங்களில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், மந்த கதியில் நடைபெறுவதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் நிறைவடையவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சி. ராபா்ட் புரூஸிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதன்பேரில், அப்பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்ட அவா், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

நான்குனேரி தொகுதிப் பொறுப்பாளா் சசிகுமாா், காங்கிரஸ் கட்சி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் கக்கன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.