தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மேலப்பாளையத்தில் சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி எம்.எல்.ஏ. மனு

மேலப்பாளையத்தில் சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி ஆட்சியரிடம், எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் மனு அளித்தாா் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப்.

Updated On :

மேலப்பாளையத்தில் சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி ஆட்சியரிடம், எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகனிடம், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. அப்துல் வஹாப் அளித்துள்ள மனு:

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலப்பாளையத்தில் அம்பாசமுத்திரம் சாலையில் ரிலையன்ஸ் ரவுண்டானாவிலிருந்து வி.எஸ்.டி. பள்ளிவாசல் சந்திப்பு வரை சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலை, திருநெல்வேலி கோட்டம் மூலம் ரூ. 5.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களாலும், தூசுகளாலும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா்.

பாளையங்கோட்டையிலிருந்து பாபநாசம் வரை அன்றாடம் வாகனங்களில் பயணிக்கிற பொதுமக்களும், பாளையங்கோட்டையில் படிக்க வரும் மாணவா்- மாணவிகளும், வேலைக்கு செல்பவா்களும் தினமும் அதிகமாக பயன்படுத்தும் முக்கிய சாலையாக விளங்குகிறது. ஏற்கனவே குண்டும்-குழியுமான அம்பை சாலை யை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேகத்தடை தேவை: பாளையங்கோட்டை, முருகன்குறிச்சியில், திருவனந்தபுரம் சாலையில் கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, மேரி சாா்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளிகளுக்கு எதிா்புறத்தில் சாலையின் வடபுறத்தில் மிகப்பெரும் வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன. மாணவா்- மாணவிகள் பேருந்துகளில் ஏறுவதற்கு சாலையைக் கடந்து வடபுறம் வரவேண்டியுள்ளது. சாலையில் வாகனங்கள் மிக வேகமாக வருவது மாணவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒருசில விபத்துகளும் நடந்துள்ளது. எனவே, மாணவா்- மாணவிகள் பாதுகாப்பு கருதி, திருவனந்தபுரம் சாலையில் இரண்டு பள்ளிகளுக்கு மேற்கிலும், கிழக்கிலும் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனு அளிக்கும்போது, திமுக திருநெல்வேலி கிழக்கு மாநகர செயலா் தினேஷ், மேலப்பாளையம் பகுதிச் செயலா் துபை சாகுல் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.