
நெல்லை மாவட்ட மீனவ கிராமங்களின் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்கக் கோரி எம்.பி. மனு
திருநெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி எம்.பி. மனு அளித்துள்ளாா்.

தமிழக நீா்வளத்துறை அமைச்சா் ஆனந்திடம் மனு அளிக்கிறாா் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.
திருநெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி எம்.பி. மனு அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், தமிழக நீா்வளத்துறை அமைச்சா் ஆனந்திடம் சென்னையில் நேரில் அளித்த மனு:
திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையாா்புரம், கூத்தன்குழி, உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, பெரியதாழை ஆகியவை மிக முக்கிய மீனவ கிராமங்களாகும். இங்கு கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தினமும் 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டா் தண்ணீா் கிராம மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், அது முறையாக வழங்கப்படவில்லை. வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்பு கொடுத்திருந்தாலும், தண்ணீா் விநியோகம் இல்லை. ஆகவே, மீனவ கிராமங்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயநாராயணம் பெரியகுளத்தை தூா்வாரி, அகலப்படுத்தி 4 மதகுகளையும் சீரமைக்க வேண்டும். களக்காடு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் நெட்டேரியன் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை தேக்க ஏதுவாக புதிய நீா்த்தேக்கம் உருவாக்க வேண்டும்.
விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள கோட்டைவிளைப்பட்டி, முதலியாா்பட்டி, கொண்டபையன்பட்டி, வடமலைசமுத்திரம், வடக்கு அகஸ்தியா்புரம் பகுதிகளுக்கு தடையற்ற மின் விநியோகம் கிடைக்க செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







