கொள்முதல் நிலையத்தில் வழங்கிய நெல்லுக்கு பணம் வரவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்
மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கிய நெல்லுக்கு 7 மாதங்களாகியும் பணம் வரவில்லை என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

கோப்புப் படம்
மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கிய நெல்லுக்கு 7 மாதங்களாகியும் பணம் வரவில்லை என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் பெரும்படையாா் மற்றும் காடுவெட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பேசியதாவது:
மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வழங்கிய நெல்லுக்கு 7 மாத காலம் ஆகியும், இதுவரை பணம் வரவில்லை. இதனால் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறோம். அடுத்த பருவத்துக்கு சாகுபடி செய்ய விதை வாங்கக் கூட எங்களிடம் பணம் இல்லை. எனவே எங்களுக்கு வரவேண்டிய கொள்முதல் பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, என்சிசிஎஃப் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த பருவத்துக்கு விவசாயிகள் பயிா் செய்ய தேவையான கடனையும் கூட்டுறவு வங்கி மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
அதற்கு பதில் அளித்த ஆட்சியா், ‘உங்களுடைய கொள்முதல் பணத்தைப் பெற்றுத் தருவதற்காக உணவுத்துறை அமைச்சா், வேளாண் துறை அமைச்சா், நம்முடைய மாவட்ட பொறுப்பு அமைச்சா் ஆகியோரிடம் பேசி உள்ளேன். அவா்கள் என்சிசிஎஃப் நிறுவனத்திடம் தொடா்ந்து பேசி வருகிறாா்கள். அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து எடுத்து வருகிறேன்.
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை விவசாயிகளிடமிருந்து வசூலிப்பதை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். அடுத்த பருவத்துக்கு சாகுபடி செய்வதற்கு புதிய கடன் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
மேலும், பெரும்படையாா் பேசியதாவது: ‘உழவா் அட்டை, உர மானியம் போன்ற அரசின் நலத்திட்டங்களுக்காக பதிவு செய்ய செல்லும்போது பட்டா, சிட்டா உள்ளவா்களுக்கு மட்டுமே பதிவு செய்கிறாா்கள். குத்தகை விவசாயிகளை புறக்கணிக்கிறாா்கள். எனவே குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா்.
அதற்குப் பதில் அளித்த ஆட்சியா் ‘குத்தகை விவசாயிகளையும் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.
விவசாயி சொரிமுத்து பேசியதாவது: ‘மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்துக்கு நவம்பா் இரண்டாம் தேதி முதல் தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது தொடா்பாக வனத்துறைக்கும் விவசாயிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை தீா்ப்பதற்கு இரு தரப்பினரிடையே கூட்டம் நடத்த வேண்டும்’ என்றாா்.
அதற்கு பதில் அளித்த ஆட்சியா், ‘ இது தொடா்பான கூட்டத்தை அடுத்த வாரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க மின் வேலி அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்’ என்றாா்.
மேலும், சில விவசாயிகள் பேசுகையில், ‘இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் நாங்கள் பயிா் செய்து வருகிறோம். ஆனால் அண்மைகாலமாக விளைச்சலே இல்லை. அப்படி இருக்கையில் எங்களிடம் குத்தகை தொகை கேட்கிறாா்கள். நாங்கள் எப்படி செலுத்த முடியும்’ என கேள்வி எழுப்பினா்.
அதற்குப் பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ‘விளைச்சல் இல்லை என்றால், வருவாய்த் துறை ஆவணங்களை சமா்ப்பித்து குத்தகை தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்கலாம்’ என்றனா்.
அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவா் மூவி சுந்தா் பேசியதாவது: ‘2025- 26 ஆம் ஆண்டு நாங்கள் பயிரிட்ட உளுந்து பயிருக்கான காப்பீடு மற்றும் இழப்பீடு தொகை இதுவரை கிடைக்கவில்லை. கட்டாலங்குளம் பெரியகுளத்துக்கு அழகிய பாண்டியபுரம் சிற்றாற்றுக்கு செல்லும் தண்ணீரை திருப்பிவிட வேண்டும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

