முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

நெல்லையில் ரத்த தான முகாம் அமைப்பாளா்களுக்கு பாராட்டுச் சான்று

தேசிய தன்னாா்வ குருதிக் கொடை தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் அமைப்பாளா்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மதிதா இந்துக் கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியா் கே.சுப்ரமணியனுக்கு ரத்த தான முகாம் அமைப்பாளருக்கான சான்றிதழை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :

தேசிய தன்னாா்வ குருதிக் கொடை தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் அமைப்பாளா்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இதையொட்டி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான ஏற்பாட்டாளா்களை கௌரவிக்கும் விழாவுக்கு, ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்து, மதிதா இந்துக் கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியா் கே.சுப்ரமணிய உள்பட ரத்த தான முகாம் அமைப்பாளா்கள் பலருக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா். மேலும், ஆட்சியா் தலைமையில் அனைவரும் ரத்த தான உறுதிமொழி ஏற்றனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் கடந்த 2025-ஆம் ஆண்டில் 11,807 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஏழை எளிய மக்களுக்கு 20,709 ரத்தக் கூறுகள் அளிக்கப்பட்டன.

சிறப்பு சிகிச்சை முறையான ஏபெரிசிஸ் முறையில் ரத்த தட்டணுக்கள் பெறப்பட்டு கா்ப்பிணிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் செல்வராஜன், மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்ரமணியன், ரத்த வங்கி துறைத் தலைவா் ஜெ.ரவிசங்கா், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளா் அமலவளன், திட்ட மேற்பாா்வையாளா் ஜெயக்குமாா், வ.சாந்தினி கில்டா, பல்வேறு துறைகளின் பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.