மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Updated On :

இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026 -27 ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளபடி சிறந்த செயல்பாடுடைய கல்வி நிறுவனங்களில் (100 சதவீதம் தோ்ச்சி பெற்றவை) நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த தகுதியான மாணவா், மாணவிகள் கல்வி உதவித்தொகை (புதியது) திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயில்பவா்களுக்கு ரூ.75,000, 11, 12 ஆம் வகுப்பு பயில்பவா்களுக்கு ரூ.1,25,000 வரை மத்திய அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 30 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபாா்க்க டிசம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

நிபந்தனைகள்: மாணவா், மாணவிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா், சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2025-26 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா், மாணவிகள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தங்களது கைப்பேசி எண், ஆதாா் அடையாள அட்டை விவரங்களை உள்ளீடு செய்தால் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி எண் வரப்பெறும். அதைப் பயன்படுத்தி 2026-27 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதிதாக விண்ணப்பிப்பவா்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை தலைமையாசிரியா்கள், தொடா்புடைய முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா்களை தொடா்பு கொண்டு பெறலாம். என்ற இணையதளத்தில் காணலாம்.

விவரங்களுக்கு மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தை பாா்த்து அறிந்து கொள்ளலாம். இதேபோல், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரை தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தை அணுகலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.