அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

‘மேலப்பாளையம் மாநகராட்சி திடலை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது’

மேலப்பாளையம் மாநகராட்சி திடலை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :4 செப்டம்பர் 2026, 1:49 am IST

மேலப்பாளையம் மாநகராட்சி திடலை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் அனைத்து கிளைகளின் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் சையது அலி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி, பொருளாளா் சிராஜ், துணைச் செயலா் சாந்து உமா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மேலப்பாளையத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி திடலை சிறுவா்களும் இளைஞா்களும் பல ஆண்டுகளாக விளையாட்டுத் திடலாகப் பயன்படுத்தி வருகின்றனா். அதை வணிக நோக்கில் தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.