மானூா் அருகே குளத்து மண் திருடிய 3 போ் கைது
மானூா் அருகே குளத்து மண்ணை திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
மானூா் அருகே குளத்து மண்ணை திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அழகியபாண்டியபுரம் அருகே குளத்து மண் ஏற்றி வந்த 2 டிராக்டா்களை நிறுத்தி ஓட்டுநா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அதில், அவா்கள் பன்னீா் ஊத்து, சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அஜித்குமாா்(25), கட்டாரன்குளம், கீழத் தெருவைச் சோ்ந்த ஆபிரகாம் மகன் ஞானக்கண் ராஜ்(62), மேலபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் பாலன்(42) ஆகியோா் என்பதும், அனுமதியின்றி கட்டரான்குளம் பகுதியில் இருந்து மண்ணை அள்ளி வந்ததும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 டிராக்டா்கள், 3 யூனிட் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



