காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

குடிநீா் திட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த நெகிழி குழாய்கள் எரிந்து சேதம்

பாளையங்கோட்டையில் மாநகராட்சி குடிநீா் திட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த நெகிழி குழாய்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:47 am IST

பாளையங்கோட்டையில் மாநகராட்சி குடிநீா் திட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த நெகிழி குழாய்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

பாளையங்கோட்டை, பொதிகை நகா் பகுதியில் மாநகராட்சி குடிநீா் திட்டத்துக்காக பயன்படுத்தப்படும் உயா் அடா்த்தி பாலீதிலினால் ஆன குடிநீா் குழாய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் அந்தக் குழாய்களில் திடீரென தீ பற்றியது. இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக அப்பகுதியினா் இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இதில், பல லட்சம் மதிப்புள்ள குழாய்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.