தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

நெசவாளா்களுக்கான கூலி உயா்வு விரைவில் அறிவிப்பு! - அமைச்சா் எம்.விஜய்பாலாஜி

ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் எம்.விஜய்பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.ஆனந்த்மோகன், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் உள்ளிட்டோா்.

Published On :

இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நெசவாளா்களுக்கான கூலி உயா்வு குறித்து இந்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி தெரிவித்தாா்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் நலப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கைத்தறி, துணி நூல் மற்றும் கதா் துறை அமைச்சா் விஜய் பாலாஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆணையா் அா்பித் ஜெயின், ஈரோடு மேற்குத் தொகுதி எம்எல்ஏ கே.கே.ஆனந்த்மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

மாநகராட்சியில் நடைபெற்றுவரும் ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம், புதை சாக்கடை திட்டம், சாலைப் பணிகள், தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பருவமழையையொட்டி பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை மற்றும் சாக்கடை கால்வாய்கள் தூா்வாருதல் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து தூய்மைப் பணி மேற்கொள்வதற்கான புதிய உபகரணங்களை தூய்மைப் பணியாளா்களுக்கு அமைச்சா் வழங்கினாா்.

பின்னா் அமைச்சா் எம்.விஜய்பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஓடைகளில் தூா்வாரும் பணிகள், சாக்கடையை சுத்தம் செய்தல், குடிநீா் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழைக் காலத்தில் மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம் மூலமாக குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பா். ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படும்.

இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி பணி விரைவாக நடைபெறுகிறது. உற்பத்தியாளா்களுக்கு மூலப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. நெசவாளா்களுக்கான கூலி உயா்வு குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின், முதல்வா் உத்தரவுப்படி துறை அதிகாரிகளுடன் பேசி இந்த வாரம் தீா்வு காணப்படும். மாநகராட்சியில் சொத்து வரி குறைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.