மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

குடிநீா் விநியோகத்தை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

குடிநீா் விநியோகத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் செங்கொடி தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

Published On :

குடிநீா் விநியோகத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் செங்கொடி தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரப்படுத்தக் கோரி, தமிழ்நாடு முழுவதும் 4-ஆவது நாளாக நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகா் செங்கொடி தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இளையராஜா தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் மாறன் முன்னிலை வகித்தாா். விவசாய சங்க மாவட்ட செயலா் காா்த்திகேயன், தமிழ்நாடு குடிநீா் வழங்கல் வாரிய சங்கத்தின் மாநில துணைத்தலைவா் மருதை ராஜ், மாவட்ட பொறுப்பாளா் ராஜு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மேல்நிலை நீா்த்தேக்க்தொட்டிகளுக்கு பம்ப் ஹவுஸ் ஆபரேட்டா் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், தங்கள் பணியாளா்களுக்கு ஆட்சியா் நிா்ணயம் செய்துள்ள தினக் கூலி ரூ.778-ஐ வழங்க வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீா் வழங்கும் பணியை தனியாருக்கு வழங்கும் அரசாரணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்க நிா்வாகிகள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.