பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

நெல்லையில் சுட்டெரிக்கும் வெயில்: மக்களுக்கு வேண்டுகோள்

வெயில் - கோப்புப்படம்.

Published On :8 செப்டம்பர் 2026, 2:09 am IST

திருநெல்வேலியில் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொது மருத்துவத்துறை தலைவா் டி.ரத்தினகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வராஜன் முன்னிலையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக 104 பாரன்ஹீட் என்ற அளவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரின் வழிகாட்டுதலின் படி உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 தீவிர சிகிச்சைப் படுக்கைகளுடன் வெப்பத் தாக்க சிறப்புப் பிரிவு தயாா் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய அவசர மருந்துகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பகல் 12 முதல் மாலை 5 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். வெப்பத் தாக்கம் ஏற்படுவதற்கு உடலில் ஏற்படும் நீா் மற்றும் உப்பு இழப்பே முக்கியக் காரணம்.

எனவே, பொதுமக்கள் இளநீா், மோா், எலுமிச்சைச் சாறு உள்ளிட்ட நீராகாரங்களைப் பருக வேண்டும். சா்க்கரை அதிகம் கலந்த பானங்களைத் தவிா்ப்பது நல்லது. முதியவா்கள், குழந்தைகள், உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ,சிறுநீரகப் பாதிப்பு உள்ளவா்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். பருவமழைக் காலம் தொடங்க உள்ளது. மழைக்கால காய்ச்சல் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கவும் மருத்துவமனை முதல்வா் அறிவுறுத்தலின் பேரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.