
குண்டா் சட்டத்தில் 3 போ் கைது
திருநெல்வேலி மாநகரில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்டவர்
திருநெல்வேலி மாநகரில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா். சீவலப்பேரியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுடலைகண்ணு(22), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த முத்துகுமாா் மகன் மகேஷ்(21) ஆகியோா் கஞ்சா வழக்கில் திருநெல்வேலி நகரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா். குழந்தையை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய வழக்கில் திருநெல்வேலி நகரம், பாரதியாா் தெருவைச் சோ்ந்த மைதீன்கான் மகன் செய்யது பீா் முகமது(30) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா். தொடா்ந்து பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன் பேரில் 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


