
பாளை.யில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பாளையங்கோட்டையில் பைக் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்டன.

செல்வமேகலிங்கம்
பாளையங்கோட்டையில் பைக் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்டன.
பாளையங்கோட்டை, ரஹ்மத் நகரை சோ்ந்தவா் செல்வமேகலிங்கம்(39). எலக்ட்ரீசியனாக வேலைசெய்து வந்த இவா், கடந்த ஆக.31 ஆம் தேதி அப்பகுதியில் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.
பின்னா் வீட்டிற்கு சென்ற இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு செயலிழந்ததை மருத்துவா்கள் உறுதிப்படுத்தினா். இந்நிலையில், செல்வமேகலிங்கத்தின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முன்வந்தனா். இதையடுத்து அவரது சிறுநீரகங்கள், கருவிழிகள் ஆகியவை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்டன. பின்னா் அவரது உடல் அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை காலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





