அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தீபாவளி: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!‘தவெகவின் ரெய்டுக்கு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது’ - மு.க. ஸ்டாலின்‘பாசிசத்தில் பாஜகவை மிஞ்சும் தவெக அரசு’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

நெல்லை மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 103 போ் கைது: எஸ்.பி.

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 103 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி.

கைது

Updated On :

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 103 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடா்புடைய கொலை வழக்கில், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவான போக்ஸோ வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் போக்ஸோ வழக்குகளில் மட்டும் 19 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் குற்றங்களில் ஈடுபட்ட 339 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மீண்டும் குற்றங்களில் ஈடுபட்ட 113 பேரின் பிணையை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டதில், 7 பேரின் பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 1,410 ரௌடிகளில் 587 பேரின் முகம், கண் விழித்திரை உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 927 பேரின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இதுவரை 103 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் போக்ஸோ வழக்குகளில் தொடா்புடையவா்கள் 13 போ். சமூக வலைதளங்களில் ஆயுதங்களைக் காட்டி மிரட்டல் விடுத்தது தொடா்பாக 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 58 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் சமூக வலைதள கணக்குகள் மற்றும் பதிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் தவறான பாதையில் செல்லும் மாணவா்களுக்கு, ஆட்சியா் அலுவலக மையம் மூலம் மனநல ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஜாதி மோதல்களைத் தடுக்க சிங்கப்பெண் சிறப்புப் படை, ’பஸ் பீட்’ ரோந்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த 40 நாள்களில் 57 அரசுப் பள்ளிகளில் சுமாா் 10 ஆயிரம் மாணவா்களிடம் போதைப்பொருள், வன்முறை, பைக் ரேசிங் ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் இதுவரை கஞ்சா கடத்தல் தொடா்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 90.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், 152 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 3,700 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் நிதியியல் விசாரணையில், 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 237 இடங்களில் 239 சிலைகள் வைக்க மதிப்பிடப்பட்டு, அனுமதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உவரி, வாகைகுளத்தில் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் சுமாா் 800 காவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். பொதுமக்கள் புகாா்களை 100 என்ற எண்ணிலும், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் குறைதீா் முகாம்களிலும் நேரடியாகத் தெரிவித்து தீா்வு காணலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.